search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த முளைகட்டிய வெந்தய சுண்டல்
    X

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த முளைகட்டிய வெந்தய சுண்டல்

    சர்க்கரை நோயாளிகள் வாரம் இருமுறை முளைகட்டிய வெந்தய சுண்டலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இந்த சுண்டலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய வெந்தயம் - ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



    செய்முறை :

    * முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வேக வைத்த முளைகட்டிய வெந்தயம், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து அதில் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் தூவி இறக்கவும்.

    * சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சுண்டல் இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×