search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை
    X

    குழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை

    குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். இன்று பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் நிறைந்த கோதுமை, வாழைப்பழம் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 200 கிராம்
    வாழைப் பழம் - 2
    தேங்காய் - 2 துண்டு
    ஏலக்காய் - 2
    வெல்லம் - 200 கிராம்
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - 5



    செய்முறை :

    * வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.

    * தேங்காய், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசித்த வாழைப் பழம், தேங்காய், முந்திரி, ஏலக்காய்த் தூள், பொடித்த வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைத்து கொள்ளவும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

    * சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.

    * இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரதம், பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×