search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தினை எள் சாதம் செய்வது எப்படி
    X

    தினை எள் சாதம் செய்வது எப்படி

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று தினை எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எள் - 150 கிராம்,
    தினை - ஒன்றரை கப்,
    உளுந்தம் பருப்பு - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 6,
    வேர்க்கடலை - 50 கிராம்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.

    தாளிக்க :

    கடுகு - அரை டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    * தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளித்த பின் அதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.

    * சத்து நிறைந்த தினை எள் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×