search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை
    X

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

    சோள ரவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்காசோள ரவை - ஒரு கப்,
    கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு,
    தேங்காய்த் துருவல் - அரை கப்.
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். (இந்த ரவை வேக, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளும்) இதில், பெருங்காயத்தைத் தண்ணீரில் கரைத்து ஊற்றி, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

    * தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் ரவையைப் போட்டு அடுப்பை `சிம்'மில் வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறிவிடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும், இறக்கி ஆறவைக்கவும்.

    * மாவு ஆறி கையில் பிடிக்கும் பதத்தில் வந்ததும், கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×