search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் - பாசிப்பருப்பு சூப்
    X

    வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் - பாசிப்பருப்பு சூப்

    ஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் பாகற்காய் - பாசிப்பருப்பு சூப் குடிக்கலாம். இப்போது இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு பாகற்காய் - 200 கிராம்
    பாசிப்பருப்பு - 100 கிராம்
    இலவங்க இலை - 2
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    ப.மிளகாய் - 1
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    நெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - அரை லிட்டர்
    கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி

    செய்முறை :

    * கொத்தமல்லி, பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை வேகவைத்து நீரில் கரைத்து கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிகொள்ளவும்.

    * பாகற்காயை வேகவைத்து கொள்ளவும்.

    * வாணலியில் நெய் ஊற்றி சீரகம், இலவங்க இலையை சேர்த்து தாளித்த பின் பாகற்காயை போட்டு சிறிது வதக்கிய பின்னர், மிளகுதூள், இஞ்சி விழுது, ப.மிளகாய் இட்டு நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள பருப்பு கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * இதை பருகினால் ஜீரண கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். கல்லீரல் நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவு.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×