search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொன்னாங்கண்ணிக்கீரை - ஓமம் சப்பாத்தி
    X

    பொன்னாங்கண்ணிக்கீரை - ஓமம் சப்பாத்தி

    தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பொன்னாங்கண்ணிக்கீரையை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 200 கிராம்,
    பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    வெண்ணெய் -  2 டீஸ்பூன்,
    வெள்ளை எள், ஓமம் - தலா ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பொன்னாங்கண்ணிக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் பொன்னாங்கண்ணிக்கீரையை போட்டு பாதியளவு வேகும் வரை வைத்து இறக்கி ஆறவிடவும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், உப்பு, வேக வைத்த கீரை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.

    * அடுத்து மாவை மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் அடுப்பை வைத்து, சப்பாத்திகளை சுட்டு எடுக்கவும்.

    * சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை - ஓமம் சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×