search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப்
    X

    சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப்

    சத்து நிறைந்த சாமை அரிசியையுடன் காய்கறிகளை சேர்த்து காலை சிற்றுண்டிக்கு உகந்த சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - கால் கப்,
    பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்,
    பச்சைப் பட்டாணி - கால் கப்
    பால் - கால் கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - ஒன்று,
    இஞ்சி - சிறிய துண்டு,
    பூண்டு - 4 பல்,
    புதினா, கொத்தமல்லி - கால் கப்,
    சீரகம் - கால் தேக்கரண்டி,
    மிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி,
    உப்பு, வெண்ணெய் - தேவைக்கேற்ப.

    செய்முறை :

    * வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரை சூடாக்கி, வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் சீரகம், இஞ்சி, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, காய்கறிகள், புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.

    * அனைத்து நன்றாக வதங்கியதும் அதில் 5 டம்ளர் நீர் சேர்த்து (4 விசில்-10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில்) வேகவிட்டு இறக்கவும்.

    * குக்கர் விசில் போனவுடன் திறந்து உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து கலக்கி அடுப்பில் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    * சத்து நிறைந்த சாமை - காய்கறி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×