search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி
    X

    சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி

    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சத்து நிறைந்த கேழ்வரகை வைத்து எப்படி எளிய முறையில் ஸ்மூத்தி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி மாவு - அரை கப்,
    ஆப்பிள் - ஒன்று,
    பால் - அரை கப்,
    தயிர் - 3 ஸ்பூன்
    தேன் - 2 மேஜைக்கரண்டி.

    செய்முறை :

    * ஆப்பிள் விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * பாலை கொதிக்க வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    * ராகி மாவை 2 கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

    * அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரைத்த ராகி கரைசலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

    * கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

    * மிக்சியில் பால், தயிர், ராகி கூழ், ஆப்பிள், தேன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

    * அரைத்த ஸ்மூத்தியை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

    * சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பிள் ஸ்மூத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×