search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கம்பு - பச்சைப்பயறு புட்டு
    X

    சத்தான கம்பு - பச்சைப்பயறு புட்டு

    தினமும் காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது புத்துணர்ச்சியை தரும். இன்று கம்பு, பச்சைப்பயிறு வைத்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - ஒரு கப்,
    முளைவிட்ட பச்சைப்பயறு, துருவிய வெல்லம், தேங்காய்த்துருவல் - தலா அரை கப்,
    நெய் - ஒரு தேக்கரண்டி.

    செய்முறை :

    * வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும்.

    * ஒரு பாத்திரத்தில் அந்த மாவை போட்டு அதில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும்.

    * புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, வெல்லம், தேங்காய்த்துருவல் என்ற துறையில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    * சுவையான கம்பு - பச்சைப்பயறு புட்டு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×