search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி
    X

    சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி

    இன்று காலை, மாலை நேர டிபனுக்கு ஏற்ற அருமையான சத்தான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 100 கிராம் அல்லது ஒரு கப்
    காய்கறிகள் - ஒரு கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி)
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிள்காய் - 4
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    பிரியாணி இலை - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - கால் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * ஓட்ஸை ஒரு பவுலில் எடுத்து தண்ணீர் விட்டு அலசி வடித்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், காய்கறிகள் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப,மிளகாயை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
     
    * தக்காளி வதங்கியவுடன் அதில் காய்கறி, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

    * அடுத்து அதில் ஓட்ஸ் சேர்த்து கிளறவும். ஓட்ஸ் தண்ணீரில் ஊறி இருப்பதால் விரைவில் வெந்து விடும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

    * கிச்சடி நன்றாக சேர்ந்து வரும் போது ஒரு ஸ்பூன் மணத்திற்கு நெய் விட்டு, கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்.

    * சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி ரெடி.

    * இது காலை, மாலை நேர டிபனுக்கு அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×