search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான ஓட்ஸ் - கோதுமை மாவு ஊத்தப்பம்
    X

    சுவையான ஓட்ஸ் - கோதுமை மாவு ஊத்தப்பம்

    வயதானவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ், கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், கோதுமை சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - அரை க‌ப்
    கோதுமை மாவு - அரை க‌ப்
    அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
    ர‌வை - ஒரு ஸ்பூன்
    ஆலிவ் ஆயில் - தேவையான‌ அள‌வு

    வ‌த‌க்கி சேர்க்க‌ :

    வெங்காய‌ம் - ஒன்று
    ப‌.மிள‌காய் - ஒன்று
    மிள‌கு - ஐந்து
    சீர‌க‌ம் - கால் தேக்க‌ர‌ண்டி
    ந‌ட்ஸ் (முந்திரி (அ) பாத‌ம் (அ) வால்ந‌ட் - பொடியாக‌ நறுக்கியது ஒரு தேக்க‌ரண்டி
    கேர‌ட் துருவல் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, ர‌வை உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் நட்ஸை போட்டு வறுக்கவும் அடுத்து வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவலை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின் தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்கவும்.

    * நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான சுவையான ஓட்ஸ் கோதுமை மாவு ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×