search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சிகப்பரிசி - ஓட்ஸ் தோசை
    X

    சத்தான சிகப்பரிசி - ஓட்ஸ் தோசை

    டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தாக எளிமையாய் விரைவில் செய்யக்கூடிய சிகப்பரிசி - ஓட்ஸ் தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1 கப்
    சிகப்பரிசிமாவு - 1 கப்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
    மோர் - 1 கப்
    உப்பு - ருசிக்கு

    செய்முறை :

    * ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், சிகப்பரிசி மாவு, மிளகாய் தூள், மோர், உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக கலந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    * சத்தான சுவையான சிகப்பரிசி ஓட்ஸ் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×