search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கருப்பு உளுந்து சுண்டல்
    X

    சத்தான சுவையான கருப்பு உளுந்து சுண்டல்

    கருப்பு உளுந்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மாலையில் சாப்பிட சத்தான கருப்பு உளுந்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு உளுந்து  - 1 கப்
    தேங்காய் துருவல்  - 3 ஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பச்சைமிளகாய் - 3
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    கடுகு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை -  சிறிதளவு

    செய்முறை :

    * கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறுநாள் குக்கரில் தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    * தேங்காய் துருவல், இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம் நான்கினையும் மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அதில் வேக வைத்த கருப்பு உளுந்தை சேர்க்கவும்.

    * கடைசியாக அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளற இறக்கவும்.

    * சத்தான சுவையான கருப்பு உளுந்து சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×