search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான புதினா - கொத்தமல்லி சாதம்
    X

    சுவையான புதினா - கொத்தமல்லி சாதம்

    வயிற்று கோளாறுகளுக்கு அடிக்கடி புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று புதினா-கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புளி - நெல்லிக்காய் அளவு
    மிளகாய்வற்றல் - 3
    பூண்டு - 2 பல்லு
    இஞ்சி - 1 துண்டு
    உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    தேங்காய் - 4 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நல்லெண்ணய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரி - 1 தேக்கரண்டி

    செய்முறை :

    * புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்

    * வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.

    * மிக்சியில் ஆறவைத்தவற்றை போட்டு அதனுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.

    * அடுத்து அதில் உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.

    * இறக்கிய கலவையில் உதிராக வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

    * சுவையான புதினா - கொத்தமல்லி சாதம் தயார்.

    * இதற்கு இணையாக வெள்ளரிப்பச்சடி, அப்பளம், வடகம் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×