search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை
    X

    சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

    ஒரு சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கம்பு காய்கறி கொழுக்கட்டையை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 குவளை (200 கிராம்)
    தண்ணீர் - 1/2 குவளை
    வெங்காயம் - 2
    கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி -  தேவைக்கு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    நல்லெண்ணை - 1 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை :

    * வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் கம்பு மாவை போட்டு, கம்பு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

    * அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சைப்பட்டாணியை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் விரைவில் வேக வேண்டுமெனில், வாணலியை சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய்கறிக் கலவை தண்ணீர் பதம் இல்லாமல் வெந்து விட்டால், அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சற்று ஆற விடவும்.

    * வெந்த காய்கறி கலவையை கம்பு மாவுடன் சேர்த்து சுவைக்கேற்ப இந்துப்பைக் கலக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுடுநீரை கம்பு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருக்கும் போது நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும்.

    * பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    * இட்லிப் பாத்திரத்தில் உருட்டி வைத்த உருண்டைகளை வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

    * கொழுக்கட்டை வெந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள, விரல்களைத் தண்ணீரில் நனைத்து விட்டு, கொழுக்கட்டையைத் தொட்டுப் பார்க்கவும். மாவு விரல்களில் ஒட்டவில்லை என்றால், கொழுக்கட்டை நன்றாக வெந்து விட்டது என்று பொருள்.

    * சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×