search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை
    X

    சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

    அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது கேழ்வரகு வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - 2 கரண்டி,
    தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
    சீரகம் - சிறிதளவு,
    பச்சைமிளகாய் - 2
    வெங்காயம் - 1

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ராகி மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தாளித்த சீரகம், நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை 1 கரண்டி ஊற்றி மேலே நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை ரெடி.

    பலன்கள்: கேழ்வரகில் புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்பு மற்றும் பல் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×