search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்
    X

    சுவையான சத்தான பொட்டுக்கடலை துவையல்

    பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இட்லிக்கு தொட்டு கொள்ள சுவையான பொட்டுக்கடலை துவையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.


    Fried Gram thuvaiyal

    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    புளி - பாக்கு அளவு
    பூண்டுப் பல் - 3
    தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையானஅளவு  
                               
    செய்முறை :

    * மிக்சியில் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.

    * பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும்.

    * இப்போது சுவையான பொட்டுக்கடலை துவையல் ரெடி.

    * தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×