search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பாலக்கீரை - கார்ன் சான்விச்
    X

    சத்தான பாலக்கீரை - கார்ன் சான்விச்

    தினமும் காலையில் காய்கறிகள், கீரையை வைத்து சான்விச் செய்து சாப்பிட்டால் இன்று தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 1 கப்
    கார்ன் - 1/2 கப்
    ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
    பூண்டு பல் - 5
    கோதுமை பிரட் - 4 ஸ்லைஸ்
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

    செய்முறை :

    * பாலக்கீரையை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

    * சோளத்தை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பூண்டை நசுக்கி ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைத்து கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் பூண்டு சேர்த்த ஆலிவ் ஆயில், வேக வைத்த பாலக்கீரை, சோளம்த, சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    * இந்த கலவையை பிரட்டிற்கு நடுவில் வைத்து பிரட் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்து சாஸசுடன் பரிமாறவும்.

    * சுவையான சத்தான சத்தான பாலக்கீரை - கார்ன் சான்விச் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×