search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி
    X

    சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

    பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. பீட்ரூட் வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

    அரைக்க:

    பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    * அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.

    * ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை சேர்த்து சுட்டெடுங்கள்.

    * அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

    * பீட்ரூட்டை துருவியும் சேர்க்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×