search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி
    X

    உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

    உடல் சூடு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கற்றாழை லஸ்ஸியை வாரம் இருமுறை குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோற்றுக் கற்றாழை - 100 கிராம்
    தயிர் - 1 கப்
    எலுமிச்சம் பழ ஜுஸ் - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    தேன் - தேவையான அளவு
    ஐஸ் க்யூப்ஸ் - சிறிது
    புதினா இலை - 5

    செய்முறை :

    * சோற்றுக்கற்றாழையின் பச்சையான தோலை சீவி எடுத்தால் உள்ளே நுங்கு போல் இருக்கும். அதனை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.

    * மிக்சியில் சோற்றுக்கற்றாழை, தயிர், உப்பு, தேன், எலுமிச்சம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி பருகவும்.

    * உடல் சூட்டை குறைக்கும் இந்த கற்றாழை லஸ்ஸி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×