search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான தினை பெசரட்
    X

    சுவையான சத்தான தினை பெசரட்

    தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. தினை, பாசிப்பருப்பை வைத்து பெசரட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பாசிப்பருப்பு - ஒரு கப், 
    தினை அரிசி - முக்கால் கப்,  
    சின்ன வெங்காயம் - 50 கிராம், 
    இஞ்சி - சிறிய துண்டு, 
    பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), 
    கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு, 
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை: 

    * இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்

    * தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பா அரைக்கவும். 

    * அரைத்த மாவில் தேவையாயன அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். 

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

    * சுவையான சத்தான தினை பெசரட் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×