search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான பாலக் கீரை சாதம்
    X

    சத்தான சுவையான பாலக் கீரை சாதம்

    பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பாலக்கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்
    நீர் - 1 கப்
    பாலக் கீரை - 500 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 7 பற்கள்
    எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * முதலில் அரிசியை நன்கு சுத்தம் செய்து 1 கப் நீரில் ஊற வைக்கவும்

    * பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையா அரைத்து கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், அரைத்து வைத்துள்ள பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * அரிசியை ஊற வைத்த நீருடன் சேர்த்து குக்கரில் விடவும்.

    * அதனுடன் பாலக் கீரை விழுது, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து 7 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து இறக்கவும்.

    * சுவையான சத்தான பாலக் கீரை சாதம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×