search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கார்ன் - பட்டாணி சாலட் செய்வது எப்படி?
    X

    சத்தான கார்ன் - பட்டாணி சாலட் செய்வது எப்படி?

    கார்ன், பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது கார்ன் - பட்டாணி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - 1 கப்
    கார்ன்/சோளம் - 1/2 கப்
    வெங்காயம் - 1 
    தக்காளி - 1 
    கொத்தமல்லி - சிறிது
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    துருவிய சீஸ் - சிறிது

    செய்முறை :

    * பட்டாணி, கார்ன்/சோளத்தை வேக வைத்து கொள்ளவும்.

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் பட்டாணி மற்றும் சோளத்தைப் போட்ட பின் அதில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

    * பின்னர் அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

    * அடுத்து அதன் மேல் துருவிய சீஸை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.

    * பட்டாணி கார்ன் சாலட் ரெடி 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×