search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பாகற்காய் தயிர் பச்சடி
    X

    சத்தான பாகற்காய் தயிர் பச்சடி

    பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது பாகற்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 4 
    மஞ்சள் - 2 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1/2 மூடி
    கடுகு - 1 தேக்கரண்டி (அரவை மற்றும் தாளிப்பதற்காக)
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தயிர் - 3 கப்
    பெருங்காயம் - சிறிதளவு

    செய்முறை :

    * பாகற்காயை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

    * தேங்காய், பச்சை மிளகாய், கடுகு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வறுக்கவும். 
    * பிறகு அதில் அரைத்த கலவையை சேர்க்கவும். 

    * நன்றாக கொதித்த பின் பெருங்காயம் சேர்த்து இறக்கவும். 

    * நன்கு ஆறிய பிறகு தயிர் சேர்க்கவும். 

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் தயிர் கலவையில் கொட்ட வேண்டும்.

    * சுவையான சத்தான பாகற்காய் தயிர் பச்சடி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×