search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பச்சைப் பயறு - கீரை தோசை செய்வது எப்படி
    X

    பச்சைப் பயறு - கீரை தோசை செய்வது எப்படி

    பச்சைப் பயறு, கீரை, கோதுமை மாவு கொண்டு சத்தான தோசையை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு -  100 கிராம்
    கோதுமை மாவு - 50 கிராம்
    இட்லி மாவு - 100 கிராம்
    முருங்கைக்கீரை - 50 கிராம்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    ப.மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 

    * அரைத்த பச்சை பயிறு மாவுடன் இட்லி மாவு, கோதுமை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * அடுத்து அதில் முருங்கைக்கீரையை தனியே வேகவைத்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து, வேகவிட்டு எடுக்கவும். 

    * சுவையான சத்தான பச்சைப் பயறு - கீரை தோசை ரெடி.

    * முருங்கைக்கீரைக்குப் பதில் சிறுகீரையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×