search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான ஜவ்வரிசி அடை
    X

    சுவையான சத்தான ஜவ்வரிசி அடை

    ஜவ்வரிசியில் பாயாசம் மட்டுமல்ல அடை செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப், 
    பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்), 
    அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப், 
    வெங்காயம் - 4, 
    இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு, 
    தேங்காய் துருவல் - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு 
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 

    * ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், பொட்டுக்கடலை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொட்டிய பிசைந்து வைக்கவும். 

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

    * இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×