search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி
    X

    சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

    சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள் காலை வேளைகளில் அவித்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் : 

    பச்சரிசி மாவு - ஒரு கப், 
    தேங்காய் துருவல் - அரை கப், 
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், 
    நெய் - சிறிதளவு, 
    முந்திரி - 8, 
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை: 

    * பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். 

    * தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    * வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். 

    * புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து... மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கலவையை வைத்து அடைக்கவும். 

    * இதை ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 

    * பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து... நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

    * இதற்கு தொட்டு கொள்ள கொண்டைகடலை குருமா சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×