search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை
    X

    தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை

    சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
    தீப்புண் மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது. வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

    * வீட்டில் தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனடியாக அந்த புண்ணை கவர் செய்திடுங்கள். மற்ற பாக்டீரியா தொற்று அதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . உடனடியாக ப்ளாஸ்டிக் கவர் மூலமாகவோ அல்லது சுத்தமான துணியாலோ அந்த புண்ணை மூடிடுங்கள்.

    * காயம் அதிகமில்லை லேசான வீக்கம் மட்டும் அல்லது எரிச்சல் மட்டும் இருக்கிறதென்றால் இதனை செய்யலாம். தீப்புண் உண்டான இடத்தை குழாய் நீரில் காட்டிடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை குளிர்ந்த நீரினால் காயமேற்ப்பட்ட இடத்தை கழுவிடுங்கள். பின்னர் அந்த இடத்தில் ஐஸ் வைக்கலாம். ஆண்ட்டிபயாட்டிக் க்ரீம் இருந்தால் தடவலாம். கவனம், காயம் ஆழமாக இல்லாதிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய வேண்டும்.

    * அதிக சூட்டினால் கொப்புளங்கள் உண்டாகி அது உடைந்து அதிலிருந்து சீழ் அல்லது தண்ணீர் வந்தால் உடனேயே கழுவிடுங்கள். நன்றாக கழுவிய பின்னர். சுத்தமான துணியைக் கொண்டு மூடிட வேண்டும்

    * உடலில் தீக்காயம் ஏற்ப்பட்டால் முதலில் சருமத்தை குளிர்ச்சியாக்க வேண்டும். காயத்தை சுத்தமாக கழுவிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்திடுங்கள். இது உங்கள் மனநிலையையும் மாற்றிடும்.



    * சூடான தண்ணீர் கொட்டி விட்டது என்றால் உடனடியாக குளிர்ந்த நீரினால் கழுவி விட்டு அங்கே அதிக கெமிக்கல் இல்லாத டூத் பேஸ்ட் அப்ளை செய்திடலாம்.

    * உருளைக்கிழங்கினை சுத்தமாக கழுவி தோல் நீக்கி காயத்தின் மீது வைக்கலாம். இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கு தான் பச்சையாக அப்படியே பயன்படுத்த வேண்டும். வேக வைத்தவற்றை பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கின் தோலைனைக் கூட இதற்கு பயன்படுத்தலாம். சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீக்காயம் உள்ளாகியிருந்தால் இதனை செய்திடலாம். ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால் இதனைச் செய்யுங்கள். 

    * தீக்காயம் ஏற்ப்பட்ட பகுதியில் அதிக எரிச்சல் இருந்தால் இதனை செய்திடுங்கள். வீட்டில் பயன்படுத்திய டீ பேக் இருந்தால் அதனைக் கூட பயன்படுத்தலாம். சூடாக இருந்தால் குளிர்ந்த நீரில் கழுவி குளிர்ச்சியாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை காயமேற்ப்பட்ட இடத்தில் பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுகக்வும். டீயில் இருக்கும் டேனிக் ஆமிலம் காயத்தின் எரிச்சலை கட்டுப்படுத்தும்.

    * தீக்காயம் ஏற்ப்பட்டு சருமம் சிவந்திருந்தாலோ அல்லது அதிக வலியோ எரிச்சலோ உண்டானால் காயத்தின் மீது தயிர் தடவலாம். இது சீக்கிரமே காய்ந்திடும். காய்ந்ததும் மீண்டும் இரண்டாவதாக மூன்றாவதாக தயிர் அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    Next Story
    ×