search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கீன்வா
    X

    கெட்ட கொழுப்பைக் குறைக்கும் கீன்வா

    கீன்வா போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான இப்பிரச்சனைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம்.
    Quinoa என்பதை தமிழில் கீன்வா என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். 

    இந்த உணவுப்பொருள் முழு தானியம்(Whole Grain) எனக் குறிப்பிடப்படுகிறது. இதனைப் பாலீஷ் செய்யும்போது, தவிடு(Bran), முளை(Gem) போன்றவை அப்படியே இருக்கும். உமி(Husk) மட்டும்தான் நீக்கப்படுகிறது. இதனால், நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கிறது. 

    நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வாக கீன்வா போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம். இந்த தானியத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. 



    மற்ற தானியங்களில் உள்ளது போல் இதிலும் குறைவான அளவிலேயே மாவுச்சத்து இருக்கிறது. அரிசியைவிட இதில் புரதச்சத்து அதிகம். இந்த தானியம் தாவர புரதம் மற்றும் முழுமையான புரத உணவு. முட்டையில் காணப்படுகிற அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கீன்வா மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

    இந்த தானியத்தில் Soluble, In-soluble(எளிதில் கரைதல் மற்றும் கரைவதற்கு கடினமானது) நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை சரி செய்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உடல் எடை ஆகியன அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். இது முழு தானியம் என்பதாலே கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைவு கிடைக்கும். 

    இத்தனை சிறப்புகள் கொண்டது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிக்கு எவ்வளவு மாவுச்சத்து தேவை என ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறாரோ அந்த அளவுக்குத்தான் கீன்வா சாப்பிடலாம். எந்த தானியத்தை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், அது சரிவிகித உணவில் ஒரு பங்காக மட்டுமே இருக்க வேண்டும். 

    Next Story
    ×