search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணர்ச்சிகள் உருவாக்கும் நோய்கள்
    X

    உணர்ச்சிகள் உருவாக்கும் நோய்கள்

    அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்ள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதால், அவர்களது வயிற்றில் அதிக அளவு அமிலம் சுரக்கிறது.
    அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்ள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதால், அவர்களது வயிற்றில் அதிக அளவு அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகின்றன. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும்.

    தன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும், மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணம் வெட்க உணர்ச்சியும், பயமுமே ஆகும்.

    அதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள், விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகலாம்.

    மன உணர்ச்சிகளால் உடல் அதிக பருமனாகும் வாய்ப்பு உள்ளது. சிலர் எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல், உடல் மெலிவாகத் தோன்றும். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது. ஹிஸ்டீரியா எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவது இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணம்.



    சோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப்பைக் குறைக்கும்போது உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில், பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும். அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே, நம் சுவாசத்தையும் பாதிக்கிறது. 

    அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சி யும் தோன்றலாம். தட்பவெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

    மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ, அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×