search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்றில் காற்று தொல்லையும் - தீர்வும்
    X

    வயிற்றில் காற்று தொல்லையும் - தீர்வும்

    ஜூரணம் நடைபெறும் பொழுது வயிற்றில் காற்று உண்டாவது இயற்கையாய் நிகழும் ஒன்றே. இதற்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    ஜூரணம் நடைபெறும் பொழுது வயிற்றில் காற்று உண்டாவது இயற்கையாய் நிகழும் ஒன்றே. ஆனால் அது வயிற்றில் அதிக வலியினை ஏற்படுத்தும் பொழுதும், துர்நாற்றத்துடன் இருக்கும் பொழுதும் பிரச்சினை ஏற்படுகின்றது.

    உணவுப் பாதையில் உணவு உடையும் பொழுது காற்று உருவாகும். இது மேலே வாய் வழி ஏப்பமாகவும் கீழே இறங்கினால் குடல் மூலமாகவும் வெளியேறுகின்றது. சிலருக்கு அதிக காற்று உருவாகும்.

    * சதா (எப்போதும்) சூயிங்கம் மெல்லுவது.
    * உண்ணுவதோ, குடிப்பதோ மிக வேகமாக செய்வது.
    * புகை பிடித்தல்.
    * பல்செட் மிக லூஸாக இருப்பது.

    ஆகிய காரணங்கள் அதிக காற்றை உருவாக்கும்.

    சில நேரங்களில் உணவு, உணவு பாதையில் சரியாக உடைபட முடியாத நிலையிலும் காற்று உருவாகும். எனினும் இத்தொந்தரவு சற்று கூடுதலாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பொதுவில் உணவு விசயங்களில் நாம் கவனம் செலுத்துவதும் காற்று உருவாவதினை தவிர்க்கும்.

    * சர்க்கரையினை உடைக்க என்ஸைம்கள் இல்லாத பொழுது காற்று உருவாகும்.
    * உருளை கிழங்கு, சோளம், கோதுமை இவை காற்றினை உருவாக்கலாம்.
    * நார்சத்து உடலுக்கு நன்மையே. ஆனால் திடீரென அதிக நார்சத்தினை எடுத்துக் கொள்ளும் பொழுது அது ஒத்துக் கொள்ளாமல் காற்று உருவாகலாம்.
    * பொதுவில் ஓட்ஸ்கார் சத்து, பட்டாணி, பழங்கள்.

    இவை அதிக காற்றினை உருவாக்குகின்றன.

    * பொதுவில் நார்சத்து உணவினை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள் நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வயிற்றில் காற்று அதிகம் சேராமல் இருக்க எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்பதனை நாமே கவனித்தும் நீக்க வேண்டும்.



    * சூயிங்கம் மென்று கொண்டே இருத்தல்.
    * வேக வேகமாய் உணவு அருந்துதல்.
    * காற்றடைக்கப்பட்ட பானகங்களை தவிர்த்தல்.
    * செயற்கை இனிப்பு சேர்த்த உணவுகளை தவிர்த்தல் ஆகிய முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
    * மிக சூடாக பானகத்தினை அருந்தாமல் மிதமான சூட்டில் அருந்த வேண்டும்.

    * தினமும் எலுமிச்சை சாறு சேர்த்த நீர் அருந்தலாம். குழந்தைகள் குறிப்பாக தாய்பால், புட்டிபால் அருந்தும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றில் காற்று பாதிப்பால் வலி ஏற்படுவது உண்டு.

    தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், தான் உண்ணும் உணவில் குழந்தைக்கு எது பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விட வேண்டும்.

    புட்டி பால் கொடுக்கும் ரப்பரில் அளவான ஓட்டை குழந்தையின் வயதிற்கேற்றார் போல் இருக்க வேண்டும்.

    பொதுவில் தாய்பாலோ, புட்டிபாலோ சிறிது பால் புகட்டிய பிறகு குழந்தையினை தோளில் சாய்த்து மெதுவே முதுகில் தட்டினால் காற்று வெளியேறும்.

    * அதிக கொழுப்பில்லாத உணவினை உண்பதும்.
    * தேவையான அளவு நீர் குடிப்பதும்.
    * அடிக்கடி சிறிதளவில் உண்பதும்.
    * நடைபயிற்சி செய்வதும்.
    * இறுக்கமில்லாத ஆடைகளை அணிவதும்.
    * உண்ணும் பொழுது நிமிர்ந்து அமர்ந்து உண்பதும் வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கும்.
    * ரத்த சோகை, 
    * வெளிப் போக் கில் ரத்தம், 
    * ஜூரம், 
    * அடிக்கடி வெளிப்போக்கு, 
    * காரணமின்றி எடை குறைதல்

    ஆகியவை இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சிறிய வி‌ஷயம் என உடல் நலத்தில் எதனையும் அலட்சியமாய் விட்டு விடாமல் உடனடியாக கவனம் செலுத்துவது நிரந்தர ஆரோக்கியத்தினை அளிக்கும்.
    Next Story
    ×