search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெண்டைக்காய்
    X

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெண்டைக்காய்

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.
    நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்க விளைவில்லாத, பயனுள்ள எளிமையான மருத்துவத்தை செய்யலாம்.

    அந்த வகையில், சிறுநீர் தாரை எரிச்சலை போக்கக் கூடியதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து காணலாம். பல்வேறு நன்மைகளை உடையது வெண்டைக்காய். இந்தச் செடியின் இலைகள், வேர், காய்கள் ஆகியவை மருந்தாகி பயன் தருகிறது.

    மலச்சிக்கலை போக்குகிறது. ஆண் மலட்டுத் தன்மையை சரி செய்கிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. புற்று நோய்களுக்கு காரணமாக விளங்கும் நச்சுக்களை அழிக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தேநீர் தயாரிக்கலாம்.



    ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வெண்டைச் செடியின் வேரை நசுக்கி போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் கொள கொளப்பு தன்மையுடன் இருக்கும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கொப்புளங்களை குணப்படுத்துகிறது. தோல் நோய்களை சரி செய்கிறது. பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

    உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படும் வெண்டைக் காய்களை சாப்பிடும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றும் மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்தை தயாரிக்கலாம்.

    வெண்டைப் பிஞ்சுகளை எடுத்து நீளவாக்கில் வெட்டி மிளகுப்பொடி சேர்த்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மூட்டு வலியும் குணமாகும்.
    Next Story
    ×