search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?
    X

    நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?

    அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் 'ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் 'ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசம் இன்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம். காலை 9 மணிக்கு உணவு சாப்பிட்டால் மதியம் உட்கொள்ள 2 மணி ஆகிவிடுகிறது.

    அந்த இடைப்பட்ட நேரத்தில் அதாவது 11 மணி அளவில் டீ, சமோசா, வடை என எதையாவது சாப்பிடுகிறார்கள். இரவு சாப்பிட 9 மணி ஆகிவிடுகிறது. இதனால் மாலை 5 மணிக்கு டீ, பிஸ்கட், பஜ்ஜி, வடை சாப்பிடுகிறார்கள். ஓர் உணவு வேளைக்கும் இன்னொரு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க ஏதேனும் தீனி தேவை. இதையே 'எனர்ஜி ரீஃபில்லிங்’ என்போம்.'



    'சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம்.

    'டெம்ப் பக்கிங்' என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும்.

    மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.'
    Next Story
    ×