search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
    X

    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

    “சுத்திகரிக்கப்பட்ட” என்ற பெயரில் வருபவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாமே, தாது உப்புக்கள், வைட்டமின்கள் முதலான உயிர்ச்சத்துக்களை இழந்து விடுகின்றன. ‘உணவு’ என்பதன் இயல்பையே இழந்து விடுகின்றன. மேல்பூச்சாகச் சேர்க்கப்படும் நிரமிகளும், மண மூட்டிகளும் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

    சுத்திகரிக்கப்படும் போது (?!) எண்ணெய் 400 டிகிரிக்கு மேலே சூடாக்கப்படுகிறது. ரசாயனக் கரைப்பானைப் பயன்படுத்தி எண்ணெய் வடித்தெடுத்தபின், அதன் உண்மையான நிறம், சுவை ஆகியவற்றை இழந்து, புதியதாக உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்ப்ட்டி ஆஸிட் ஆக வெளிவருகிறது. சமையலுக்கு உபயோகிக்கும் போது மேலும் புதிய ட்ரான்ஸ்ப்ட்டி ஆஸிட்கள் உருவாகின்றன.

    இவை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகின்றன. வாதநோய், வளர்ச்சிதை மாற்றங்கள் சரிவர நடக்காததால் வரும் புற்றுநோய் ஆகியவற்றை உண்டாக்குகின்றன. ஆகவே “சுத்திகரிக்கப்பட்ட” என்ற பெயரில் வருபவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

    சமைக்க, மெஷின்கள் மூலம் பிழியப்பட்ட தேங்காய் எண்ணெய் நல்லது. அதிக உஷ்ணத்தில் சமைக்க முடியும். பாக்டீரியா, பூஞ்சைக் காளான் ஆகியவற்றை அழிக்கும். இன்புளுயன்சா, ஹைப்படைட்டிஸ் ஆகிய நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும்.

    பிளக்ஸ் சீட் ஆயிலில், ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் பேக்கிங் செய்ய நல்லது. ஆனால் சமைக்கப் பயன்படுத்தக்கூடாது.



    நல்லெண்ணை நல்லது என்பதை அதன் பெயரே காட்டும். புளிசாதம், ஊறுகாய் போன்ற சிலவகைத் தயாரிப்புகளுக்கு நல்லெண்ணை உகந்தது. ஆந்திராவில் நல்லெண்ணை உபயோகம் அதிகம். ஆனால் தோல் நோய் இருப்பவர்கள் நல் லெண்ணை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    கேரளாவில் தேங்காய் எண்ணெயே முழுக்க பயன்படுத்துவர். வடமாநிலங்களில் கடுகு எண்ணெய் உபயோகம் அதிகம்.

    ஆகவே ‘சுத்திகரிக்கப்பட்ட’ பொருட்களை விடுத்து, பழைய முறைப்படி இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களுக்கு மாறுவதே நல்லது. மேலும் மேலும் உடல்நலம் கெடாமலிருக்கும்.

    அறிவியல் உண்மைகள் என்று சொல்லப்படுபவை நாளடைவில் மாறிவிடலாம். ஆனால் நமது முன்னோர்கள் தமது ஞானத்தில் கண்டறிந்து விஷயங்கள் நிரந்தரமானவை! எவ்வித சுயநலமும் இல்லாமல் மக்கள் நலனுக்காக ரிஷிகள், ஞானிகள் தம் உள்ளுணர்வில் சொன்னவை மாறாதவை.

    அறிவியல் ஒரு எல்லையைத் தாண்டிப்போக முடியவில்லை. தேங்காய் எண்ணெய் முதலானவைகளிலிருக்கும் கொழுப்புச்சத்து கெடுதல் என்பர், பின் உடல்நலனுக்கு நல்லது என்பர். ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் சொன்னவை காலத்தால் அழியாமல் நிற்கின்றன. ஆகவே, நன்மை செய்வதாகக் கருதி அறிவியல் புகுத்தும் ஜீன் மாற்றப்பட்ட உணவுகள், சுத்தி கரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை விலக்கி இயற்கை வழி வாழ்ந்தால், நோயின்றி வாழலாம்!-

    - டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-4322888, 2367200)
    Next Story
    ×