search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அடிக்கடி ஏப்பம் வருவது ஏன் தெரியுமா?
    X

    அடிக்கடி ஏப்பம் வருவது ஏன் தெரியுமா?

    ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்.
    ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது தான் என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிடும். உங்களது வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்கள் ஆகியவை சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

    நீங்கள் அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது அடிக்கடி வரும் ஏப்பத்திற்கு காரணமாக அமைகிறது.

    நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உங்களது உடலில் உணவுக்கான இடத்தை வாயு நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

    இரவு நேரத்தில் ப்ரோக்கோலி, காளிஃபிளவர், முளைக்கட்டிய பயிர்கள் போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவது ஏப்பம் வருவதற்கு காரணமாக உள்ளது.

    நாம் சாப்பிடும் போது உணவுடன் சேர்ந்து சிறிது காற்றும் உள்ளே சென்றுவிடுகிறது. நாம் அலுவலகத்திற்கு செல்லும் போது அவசர அவசரமாக சாப்பிடுவதாலும் கூட வாயு உள்ளே சென்றுவிடுகிறது.



    அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தமாகும். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

    மலச்சிக்கல் பிரச்சனையானது பல பிரச்சனைகளுக்கு அடிக்கல்லாக இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் உண்டாகும். இவர்கள் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    நீண்ட நாட்களாக மன அழுத்தம், கஷ்டம், சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்வது நல்லது.

    அஜீரண கோளாறுகள் மற்றும் குடலியக்க பிரச்சனைகளால் ஒருவருக்கு அடிக்கடி ஏப்பம் உண்டாகும்.

    Next Story
    ×