search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல்நலம் காக்கும் மருத்துவ குறிப்புகள்
    X

    உடல்நலம் காக்கும் மருத்துவ குறிப்புகள்

    அநேகருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு மருத்துவ சந்தேகம் இருக்கும். அனைவருக்காகவும் சில பொதுவாக அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களின் பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
    அநேகருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு மருத்துவ சந்தேகம் இருக்கும். கேட்பதற்கு சங்கடப்படவும் செய்வர். அத்தகையோருக்காகவும் மேலும் அனைவருக்காகவும் சில பொதுவாக அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களின் பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

    * நீரிழிவு நோய் பிரிவு 2 பாதிப்பு உடையோர் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாமல் மருந்திலேயே காலம் முழுவதும் சமாளிக்க முடியுமா? நீரிழிவு நோய் வளர்ந்து கொண்டே வரக் கூடிய பாதிப்பு குணம் கொண்டது தான். இதனை உட்கொள்ளும் மருந்தின் மூலம் மட்டுமே கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்ற கேள்விக்கான பதில் பல விஷயங்களைச் சார்ந்துள்ளது.

    பாதிப்புடையவர் தனது எடையினை அளவாக வைத்துக் கொள்ளுதல், தவறாது உடற்பயிற்சி செய்தல், பரம்பரை, உடலில் ஹார்மோன்களின் செயல்திறன், இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் என பல காரணங்கள் இதனுள் அடங்கி உள்ளது. எனினும் ஆய்வுகள் கூறுவது இந்நோயின் ஆரம்ப காலத்திலிருந்தே முனைந்து கட்டுப்பாட்டில் தொடர்ந்து கொண்டு வந்தால் வருடங்கள் கூடும் பொழுது இது மிக நல்ல பலனை அளிக்கின்றது.

    * தேவையான அளவு தூக்கம் தேவை என அறிவுறுத்தப்படுவதை அலட்சியமாகக் கருதாதீர்கள். 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். பிஸியான வாழ்க்கை, வேலை, குடும்பம் என்ற சூழலில் நம்மால் தேவையான தூக்கம் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை ‘தூக்க சுகாதாரம்’ என்று கூறுவதுண்டு. இதனை பின்பற்றும் பொழுது சோர்வு அதிகம் நீங்கும்.

    * தினமும் குறிப்பிட்ட அதே நேரத்திற்கு படுக்கச் சென்று குறிப்பிட்ட அதே நேரத்தில் விழிக்கப் பழகுங்கள். மறுநாள் விடுமுறை தானே என கண் விழித்து சினிமா பார்ப்பது போன்றவற்றினை தவிருங்கள்.

    * தூங்கப் போவதற்கு 8 மணி நேரம் முன்பாக காபி, டீ போன்றவற்றினைத் தவிருங்கள். உங்களது மாலை காபி, டீயினை அடியோடு தவிர்த்து விடுங்கள். இன்னமும் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றால் மதியம் 12-க்குப் பிறகு இவற்றினைத் தவிர்ப்பதே முறையானது.

    * ஆல்கஹாலை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில்லை. நிறுத்தி விடுங்கள். அடியோடு நிறுத்தி விடுங்கள் என்றுதான் அறிவுறுத்தப்படுகின்றது.

    * தூக்கமின்றி படுக்கையில் படுக்காதீர்கள். படுக்கைக்கு சென்ற பிறகு 20 நிமிடங்கள் கழித்தும் தூக்கம் வரவில்லை என்றால் உடனடி எழுந்து விடுங்கள்.
    எழுந்து அமர்ந்து ஏதாவது படியுங்கள். டி.வி. கூட பாருங்கள். ஆனால் இதனை படுத்துக் கொண்டே செய்யாதீர்கள்.
    Next Story
    ×