search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு தேவையான சில அவசிய குறிப்புகள்
    X

    உடலுக்கு தேவையான சில அவசிய குறிப்புகள்

    பல மருத்துவ குறிப்புகளை, ஆரோக்கிய உணவு குறிப்புகளை ஆர்வமாய் அறியும் நாம் சில தேவையான சிறிய அரிய குறிப்புளை மறந்து விடுகிறோம். அவற்றினை சிறிது ஞாபகப்படுத்திகொள்ளலாம்.
    பல மருத்துவ குறிப்புகளை, ஆரோக்கிய உணவு குறிப்புகளை ஆர்வமாய் அறியும் நாம் சில தேவையான சிறிய அரிய குறிப்புளை மறந்து விடுகிறோம். அவற்றினை சிறிது ஞாபகப்படுத்திகொள்வோமா,

    * தக்காளி பழங்களின் சூப்பர் ஸ்டார். இதிலுள்ள லைகோபென் புற்றுநோயினை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது வைட்டமின் சக்தி மிகுந்தது. ஐந்து நாள் ஆப்பிள் சாப்பிடும் பலனில் அநேகத்தின் தினமும் ஒரு தக்காளி சாப்பிடுவதன் மூலம் அடையலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் வெகுவாய் கட்டுப்படுகின்றது. என்பதனை ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

    * குளித்த பிறகு மெல்லிய துண்டு கொண்டு இரு கைகளாலும் அதனை பிடித்து முதுகு, கால்களில் சற்று தேய்த்து துடையுங்கள், இது உங்கள் நினநீர் நாளங்களை நன்கு வேலை செய்ய தூண்டும். இதற்கு கிருமி பாதிப்புகள் வெகுவாய் குறையும்.

    * வெள்ளை ரொட்டி, வெள்ளை சர்க்கரை, பாஸ்தா, அதிகம் தீட்டப்பட்ட வெள்ளை அரிசி, மாவு இவற்றினை குறைத்துப் பாருங்கள். சில கிலோ எடைகள் உடனடியாக குறைப்பீர்கள்.

    * உணவு உண்ட பிறகு ஏதாவது ஸ்வீட் வேண்டுமா, டார்க் சாக்லேட் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

    * சாதாரண தலைவலி. முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர் சத்து குறைவது சாதாரணமாய் ஏற்படுகின்றது. ஆக நீர் குடித்தால் தலைவலி உடனடியாக நீங்கும். சிறிது நேரம் சென்றும் தலைவலி தொடர்ந்தால் சாதாரண வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இதனை விட்டு காபி எடுத்துக் கொள்வது சிறந்தது அல்ல.

    * சளி பிடிக்கப் போது போலவோ அல்லது ஜூரம் வருவது போலவோ தோன்றினால் 7-9 மணி நேரம் நன்கு தூங்குங்கள். இயற்கை தானே தன்னை சரி செய்து கொள்ளும்.

    * நேராக நில்லுங்கள். ஒரு காலை உங்களுக்கு முன்பாக முடிந்தவரை தூக்குங்கள். அடுத்த காலின் முட்டி லேசாக மடங்கலாம். கண்களை மூடுங்கள். எவ்வளவு நொடிகள் உங்களால் இருக்க முடிகின்றது என்பதனை பாருங்கள். உங்கள் உடல் எந்த அளவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதனை இது உணர்த்தும்.



    * உங்கள் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது அவர்களின் கைகளை மென்மையாய் பிடித்துக் கொள்ளுங்கள். முதுகை மென்மையாய் தடவிக் கொடுங்கள். மனிதனுக்கு அன்பு மிக மிகத் தேவை. அதை கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் பலருக்குத் தெரியவில்லை. முதலில் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தாய், தந்தை, சகோதர, சகோதரி, குழந்தைகள் கணவன், மனைவி இவர்களிடம் முதலில் அன்பை காட்ட கற்றுக் கொள்ளுங்கள். இதற்கு உண்மையான மனம் போதும் பணம் தேவையில்லை. இந்த சாதாரண மென்மையான வெளிப்பாடுகளால் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கோபம், வேகம், டென்ஷன் இன்றி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் கொள்ளுங்கள். இவை நேர் வழியான உறவுகளுக்கே பொருந்தும்.

    * எப்பொழுதும் உங்கள் அவசர தேவை மருந்துகளை படுக்கை அருகில் மற்றும் உங்கள் கை பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    * உங்களுக்கு அதிக அசிடிடி தொந்தரவு இருக்கின்றனவா இரவில் இடது பக்கமாக திரும்பி படுத்துக் கொள்ளுங்கள். 80 சதவீதம் அசிடிடி பாதிப்பு உடையவர்கள் இரவில் அதிக பாதிப்பினை அனுபவிக்கின்றனர். இவர்கள் 2 தலையணை வைத்து (11 இஞ்ச் அளவு) படுக்கும் பொழுது அசிடிடி பாதிப்பு வெகுவாய் குறைகின்றது. இடது பக்கம் திரும்பிபடுக்கும் பொழுது உங்கள் அசிடிடி பாதிப்பு பாதியளவு குறைந்து விடும்.

    * உங்கள் உணவில் நல்ல புரதம், நார்சத்து இருந்தாலே உங்கள் சர்க்கரை அளவு சீர்படும் என்பதனை அறிந்து கடைபிடியுங்கள். நல்ல கொழுப்பும் இருக்கலாம். பலருக்கு இறுகிய தோள் பட்டை என்றால் என்ன என்று கூட தெரியாது இருக்கலாம். ஆனால் 40, 60 வயது உடையவர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இவர்களுக்கு இந்த பாதிப்பின் தொந்தரவு நன்கு தெரியும்.

    * இந்த பாதிப்பு உடையவர்களுக்கு தோள் பட்டை அசைக்க முடியாதவாறு இறுகி இருக்கும். வலி இருக்கும். பந்து மூட்டு எனப்படும் இவ்விடத்தில் இறுகி, இறுக்கமாகிவிடுவதாலும், இறுக்க டிஸ்யூக்கள் உருவாகுவதால், மூட்டினை நன்கு நகரச் செய்யும் திரவம் மிகவும் குறைந்து விடுவதாலும் இத்தகையை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    * முதலில் வலி, அசைவுகள் கடினமாதல் என ஏற்படும் இரவில் வலி அதிகரிக்கும்.

    * தொடர்ந்து அசைவுகள் அதிகம் குறையும். அன்றாட வாழ்க்கை கடினப்படும். ஏன் இந்த இறுகிய தோள் பட்டை உருவாகின்றது?

    * அடி படுதல்.
    * அதிக உபயோகம்
    * அறுவை சிகிச்சை
    * முதுமை
    * அதிக உழைப்பின்மை
    * சர்க்கரை நோய்

    * நாள்பட்ட நோய்கள் ஆகியவை தோள்பட்டை இறுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

    * இந்த பாதிப்பினை கூட்டும் காரணங்களாக வாதம், தைராய்டு, குறைபாடு, இருதய பாதிப்பு, நடுக்குவாதம் ஆகியவை அமையும்.
    Next Story
    ×