search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’
    X

    வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’

    உண்மையில் வெண்டைக்காய் ஒரு சர்வரோக நிவாரணி என்பதே சரி. இன்று வெண்டைக்காயில் உள்ள மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளலாம்.
    ‘வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும்’ என்று வீடுகளில் அம்மாக்கள் குழந்தைகளை வற்புறுத்திச் சாப்பிட வைப்பார்கள்.

    உண்மையில் வெண்டைக்காய் ஒரு சர்வரோக நிவாரணி என்பதே சரி.

    சர்க்கரை நோய் முதல், அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது இது.

    வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலை குறைக்கக்கூடியது. ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய்த் துண்டுகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி நீரை மட்டும் பருகி வந்தால் குடல் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையைச் சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

    இதில் உள்ள கரையும் நார்ச்சத்து, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதன் மூலம், இதய நோய் அபாயம் குறைகிறது.

    வெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவதால், அதிலுள்ள போலேட், எலும்புகளை வலுவாக்கி ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்புச் சிதைவு பிரச்சினை வராமல் தடுக்கிறது.

    எலும்புகள் வலுப்பெறவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் வெண்டைக்காய் நீரைக் குடித்து வரலாம்.

    சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்து அந்த நீரைப் பருகிவந்தால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் கட்டுப்படும்.

    வெண்டைக்காயில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை இருப்பதால், வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அதைப் பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.

    கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.

    வெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளுக்கோமா பிரச்சினைகளைத் தவிர்க்கிறது, பார்வைத் திறன் நன்கு மேம்பட உதவுகிறது.
    Next Story
    ×