search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
    X

    வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

    அதிகாலையில் எழுந்ததும் நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது.

    நெல்லிக்கனி அமுதக்கனி என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டது. நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது.

    அத்தகைய நெல்லிக்காய் ஜூஸை வெயில் காலத்திலும் மதிய நேரங்களிலும் பொதுவாகக் குடிப்போம். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி குடிப்பதால் கீழ்வரும் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

    புரதங்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் உண்டாவதைத் தடுக்கிறது.



    அதிலுள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, உடல் மற்றும் ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.

    இதிலுள்ள விட்டமின் C, நம்முடைய சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
    Next Story
    ×