search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
    X

    ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

    பலருக்கு ஆஸ்துமா ஏற்படும் தன்மை பிறந்ததிலிருந்தே இருக்கிறது. ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஆஸ்துமா என்றால் என்ன?

    ஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு ஆஸ்துமா ஏன்/ எப்படி வருகிறது?

    பலருக்கு ஆஸ்துமா ஏற்படும் தன்மை பிறந்ததிலிருந்தே இருக்கிறது. ஆஸ்துமா சில குடும்பத்தில் இருக்கிறது. ஆனாலும் குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால் மற்றவருக்கும் இருக்கும் என்று அவசியமில்லை.

    ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

    நீங்கள் ஆஸ்துமாவை சிறப்பாக கட்டுப்படுத்த இரண்டு வழிகள்:

    * உங்கள் ஆஸ்துமாவின் தூண்டுதல்களை அடையாளம் கண்டு அதை தவிர்க்க முயலுங்கள்

    * சரியான மருந்துகளை தொடர்ந்து டாக்டரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ளவும் தொடர்ந்து டாக்டரிடம் உடற்பரி சோதனை செய்து கொள்ளவும்.



    ஆஸ்துமாவிற்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன?

    இருவகையாக ஆஸ்துமா மருந்துகள் உள்ளன இவைகளுக்கு ப்ரிவென்டர்ஸ் மற்றும் ரிலீவர்ஸ் என்று பெயர். இவை வெவ்வேறு வகைகளில் செயல் புரிகின்றன. நோய் கட்டுப்படுத்தும் மருந்து. தூண்டும் பொருட்களால் காற்று குழாயில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு வராமல் தடுக்கிறது.

    இது காற்று குழாய் உட்பகுதி தடிப்பை குறைக்கிறது. இதை தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மூச்சிரைப்பு உடனடி நிவாரண மருந்து இதனை இருமல் மற்றும் மூச்சிரைப்பு இருக்கும் போது மட்டுமே உபயோகிக்க வேண்டும். இது காற்றுக்குழாய் சுருக்கத்தை சரிசெய்வது அதனை விரிவாக்கி நிவாரணமளிக்கிறது மூச்சிரைப்பு உடனடி நிவாரண மருந்தை நீங்கள் எப்போதும் கூடவே வைத்திருப்பது உறுதி செய்யுங்கள். இது எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.

    மூச்சிரைப்பு இல்லாத போதும் நோய் கட்டுப்படுத்தும் மருந்தை ஏன் உபயோகப்படுத்த வேண்டும்?

    நோய் கட்டுப்படுத்தும் மருந்து ஆஸ்துமாவை தூண்டும் பொருட்கள் காற்று குழாய்கள் நுழையும் போது காற்று குழாய் சுருங்காமல் இருக்கும்படி வைக்கிறது. ஆகையால் மூச்சி ரைப்பு வந்தபின் உடனடியாக நிவாரண மருந்தை எடுத்து கொள்வதை காட்டிலும் நோய் கட்டுப்படுத்தும் மருந்தை தொடர்ந்து உபயோகிப்பதால் மூச்சுகுழாய் அழற்சி குறைந்து நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    ஆஸ்துமாவை முழுமையாய் குணப்படுத்த முடியுமா?

    முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
    Next Story
    ×