search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனித உடலில் உள்ள உலோகங்கள்
    X

    மனித உடலில் உள்ள உலோகங்கள்

    உடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. மனித உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்துகொள்வோம்.
    உடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. எனவே, இவற்றின் அளவு சமநிலையில் இருத்தல் மிக அவசியம். மனித உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்துகொள்வோம்.

    1. கால்சியம் - பற்கள் மற்றும் எலும்புகளில் கால்சியம் ஹைட்ராக்ஸி அபடைட் எனும் சேர்மமாக இருக்கிறது. நரம்பு செல்களின் வளர்ச்சியிலும், கால்சியம் முக்கிய பங்காற்றுகின்றன.

    2. மெக்னீசியம் - எலும்பு மற்றும் உடல் கட்டமைப்பிலும் மெக்னீசியம் முக்கியமானவையாக இருக்கின்றன. உடலில் நிகழும் பல்வேறு வேதிவினைகளை, மெக்னீசியம் அயனிகள் கட்டுப்படுத்துகின்றன.

    3. சோடியம் - ரத்தம் மற்றும் செல் திரவங்களில் சோடியம் இருக்கின்றன. இவை, உடலின் கார-அமில மதிப்பையும், அழுத்த சமநிலையினையும் சீராக வைத் திருக்க உதவுகிறது.

    4. பொட்டாசியம் - சோடியம் அயனிகளை போன்றே, பொட்டாசியம் அயனிகளும், செல் திரவங்களிலும், ரத்தத்திலும் இருக்கிறது. அமிலத் தன்மை மற்றும் அயனி அழுத்தத்தையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.



    5. இரும்புச் சத்து - இரும்பு அயனிகள், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு காரணமாக திகழ்கின்றன.

    6. செம்பு (காப்பர்) - உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களிலும், உடல் உறுப்புகளின் முறையான செயல்பாட்டிற்கும் காப்பர் அவசியமான தனிமமாகும். மேலும், நோய் எதிர்ப்பு திறனை அளிப்பதிலும் முக்கிய பங்களிக்கிறது.

    7. மாங்கனீசு - சில நொதிகளில் மாங்கனீசு அயனிகள் இருக்கின்றன. குறிப்பாக, கார்போஹைட்ரேட்டு, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்திலும் மாங்கனீசை கொண்ட நொதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    8. துத்தநாகம் - உடலில் இருக்கும் முக்கிய ஹார்மோன் களில் துத்தநாகம் உள்ளது. பல்வேறு உடற்செயல்களை நிகழ்த்துவதற்கும் துத்தநாகம் அயனிகளை கொண்ட நொதிகள் தேவைப்படுகிறது.

    9. கோபால்ட் - வைட்டமின் B 12 நீரில் கரையக்கூடிய வைட்ட மினில் கோபால்ட் அயனி இருக் கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கட்டுபடுத்துவதில் வைட்டமின் B 12-ன் பங்கு முக்கியமானது.
    Next Story
    ×