search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்
    X

    பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

    நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது.
    பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவில் காணப்பட்டதால் இதற்கு இந்த பெயர் வந்ததாம். இந்த காய்ச்சலுக்குரிய வைரஸ், பன்றிகள் மூலமாக மனிதர்களை தாக்குகிறது. மேலும், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் சளி, இருமல், தும்மல் மூலமாக சக மனிதர்களுக்கு பரவுகிறது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதாக தாக்கும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகளிடம் இந்த பாதிப்பு அதிகளவில் காணப்படும். இருப்பினும் பனிக்காலங்களில் இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடும்.

    சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடம்பு வலி, தலைவலி, குளிர்காய்ச்சல், வாந்தி ஆகியவை அறிகுறிகளாகும். இவை அனைத்தும் 99 சதவீத நபர்களுக்கு ஒரு வாரத்தில் குணமடைந்து விடும். மேற்கண்ட அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல் இருந்தாலோ அல்லது அதிகப்படியான காய்ச்சல் தலைவலி, வாந்தி, குளிர் காய்ச்சல் இருந்தாலோ டாக்டரை அணுக வேண்டும். Oseltamavir (Tamiflu) மாத்திரைகளை சாப்பிட்டால் பன்றிக்காய்ச்சல் குணமாகும்.



    பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் உள்ளவர்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு தங்குமிடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கைக்குட்டை (கர்சீப்) துணிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை உண்ணுதல் போன்றவையே பன்றிக்காய்ச்சலை குணப்படுத்திவிடும். காய்ச்சலுக்கு பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

    ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரிதாக பயன்தராது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பொதுவாக குளிர்காலம் தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பே இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது. 2009-ம் ஆண்டு உலகம் முழுக்க வந்த பன்றிக்காய்ச்சலை விட தற்போதைய 2017 காய்ச்சலின் வீரியம் மிகவும் குறைந்தது தான்.
    Next Story
    ×