search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாலையோர கடையில் சூப் குடிக்க போறீங்களா... ஜாக்கிரதை
    X

    சாலையோர கடையில் சூப் குடிக்க போறீங்களா... ஜாக்கிரதை

    தற்போது சாலையோரங்களில் அதிகளவில் சூப் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. மக்கள் இந்த கடைகளில் சூப் குடிப்பதால் ஏற்படும் ஆபாயத்தை பற்றி உணராமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
    மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!

    ''வீட்டுல செய்யுற சூப், கஷாயம் மாதிரி இருக்கும். ஆனா, ரோட்டோர கடைகளில் குடிக்கிற சூப், சூப்பர்! என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. தரமற்ற முறையில் செய்து விற்கப்படும் ரோட்டோர சூப்பை குடிக்க மக்கள் படையெடுக்கிறார்கள்.

    ''தெருவோரக்கடைகளில் விற்கப்படும் சூப், விலை குறைவாக இருக்கிறது எனும்போதே அதன் தரம் சந்தேகத்துக்கு உள்ளாகிறது. ஃப்ரெஷ் காய்கறிகள் அல்லாது, விலை குறைவாகக் கிடைக்கும் மலிவு விலைக்காய்கறிகளையே இவ்வகை சூப் தயாரிக்க பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.



    சுவையூட்டிகளின் மாயத்தால் அதெல்லாம் நமக்குத் தெரியாது. சைவமே இப்படி என்றால், அசைவ சூப் பற்றி சொல்லவும் வேண்டுமா? மலிவு விலை மட்டன், சிக்கனில் செய்த சூப்தான் கப்களில் ஊற்றி நம் கரங்களில் தரப்படும்.

    அந்த மாமிசத்தை அவர்கள் எந்த நீரில் சுத்தம் செய்திருப்பார்கள், எந்தளவுக்கு கழிவு நீக்கியிருப்பார்கள், என்ன தரத்தில் சமைத்திருப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    தவிர, ரோட்டோரங்களில் உள்ள கடைகள் என்றால், சாலையில் பறக்கும் தூசு மொத்தமும் சூப்புக்குள் தான் தஞ்சம் புகும். கூடவே, இங்கே பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், கப்புகள், குவளைகளில் ஈக்கள் மொய்க்கும் பட்சத்தில், அது வேறுவிதமான பிரச்சனைகளை உண்டு பண்ணும்'' என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

    Next Story
    ×