search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் கூச்சமா?
    X

    குளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் கூச்சமா?

    சிலருக்கு இனிப்பு, புளிப்பு, சூடான (அ) குளிந்த உணவுகளை உண்ணும் போது பல் கூச்சம் ஏற்படும். இப்போது உங்கள் பல் கூச்சத்திற்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பார்க்கலாம்...
    இனிப்பு, புளிப்பு, சூடான அல்லது குளிந்த உணவுகளை உண்ணும் போது பல் கூச்சம் ஏற்படுகிறதா? இதனால் உங்களுக்கு பிடித்த உணவை உண்பதில் சிரமம் ஏற்படுகிறதா? இதோ உங்கள் பல் கூச்சத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்...

    பல் துலக்கும் போது மிகவும் கடினமான பிரஷைக்கொண்டு பல் துலக்குவதாலும், தீவிரமாக அழுத்தி பல்துலக்குவதாலும் எனாமல் பாதிப்படைகிறது. இது பல் ஈறுகளை பாதிப்படைய செய்யலாம்.



    ஈறுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் புண்களை கவனிக்காமல் விட்டுவிடும் போது அவை ஈறு நோய்க்கு காரணமாகிறது. கிருமி தொற்று மோசமாகி, பற்களை ஆதரிக்கும் திசுக்கள் மற்றும் எலும்புகளை சேதப்படுத்துகிறது. பல் கூச்சம் இதற்கு ஒரு அறிகுறியாகும்.

    நீங்கள் பற்களை கடித்தல் அல்லது பிடுங்குவது போன்று செய்யும் போது பற்களின் மீது மெல்லியதாக காணப்படும் எனாமல் பாதிப்படுகிறது.

    பற்களின் ஈறு பகுதி சேதமடைந்து, தோல் பகுதி குறைகிறது. இதனால் பற்களின் வேர்பகுதி வெளியில் தெரியும் படியாகிறது. இதனால் பல் கூச்சம் ஏற்படுகிறது. கடுமையான பிரஸ் உபயோகிப்பது மற்றும் அழுத்தமாக பல் தேய்ப்பது ஆகியவை இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.
    Next Story
    ×