search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் உணவு நஞ்சாவதைத் தடுக்க...
    X

    கோடை காலத்தில் உணவு நஞ்சாவதைத் தடுக்க...

    பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும் காலம் என்பதால் இந்தக் கோடையில்தான் அதிகளவு புட் பாய்சன் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    பலரும், ‘புட் பாய்சன்’ எனப்படும் உணவு நஞ்சாதலால் அவ்வப்போது அவதிப்படுகிறார்கள்.

    பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும் காலம் என்பதால் இந்தக் கோடையில்தான் அதிகளவு புட் பாய்சன் ஏற்படுகிறது.

    உணவுப்பொருட்களை வைத்திருப்பதிலும், சமைப்பதிலும் சுத்தம், சுகாதாரத்தைப் பராமரித்தால் புட் பாய்சனை தவிர்த்துவிடலாம்.

    உதாரணமாக, பிரிட்ஜை நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதிலுள்ள உணவுப்பொருட்கள், காய்கறிகளில் நோயை உண்டாக்கும் கிருமிகள் பரவி, அவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

    பிரிட்ஜ் மற்றும் சமையலறை மூலமாக பாக்டீரியாக்கள் பரவுவதைத் தவிர்க்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்.

    குறிப்பாக, கோடைக்காலத்தில் துரித உணவுகளை அவசியம் தவிர்க்கவேண்டும். அதிக வெப்பத்தில் பாக்டீரியாக்களானது வேகமாகப் பரவும்.



    தகுந்த சுத்தப்படுத்தும் திரவம் மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை பிரிட்ஜை துடைப்பது அவசியம்.

    சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும், காய்கறிகள், பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும்.

    சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைக்க வேண்டும். அதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதைத் தடுக்க லாம்.

    இறைச்சி போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கும்போது கவரில் போட்டு பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாது. இறைச்சியுடன் மற்ற உணவுகளையும், காய்கறிகளையும் வைக்கக்கூடாது.

    பிரிட்ஜுக்குள் சரியான குளிர்நிலையைப் பராமரிப்பதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் ‘பிரெஷ்’ ஆக இருக்கும்.

    காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை வெட்டுவதற்கு தனித்தனிப் பலகைகளை உபயோகிக்க வேண்டும். இறைச்சியை நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின்பே பயன்படுத்தவேண்டும்.

    அளவுக்கு அதிகமான பொருட்களை பிரிட்ஜுக்குள் திணித்துவைப்பதால் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதாக உருவாகும். பொருட்கள் காலாவதியாகும் தேதியை பார்த்து பயன்படுத்த வேண்டும்.

    முட்டைகள் உடைந்துவிடாமல் பத்திரமாக வைக்கவேண்டும். இறைச்சி, முட்டை, பால் உணவுப்பொருட்களை நன்கு சமைத்து உண்பது அவசியம்.

    சமையலிலும், சாப்பிடுவதிலும் கவனத்தோடு செயல்பட்டால் ‘புட் பாய்சன்’ பிரச்சினையில் இருந்து தப்பித்துவிடலாம்.
    Next Story
    ×