search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு
    X

    கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு

    கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.

    நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.

    இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.



    ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

    நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.

    குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும். நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.
    Next Story
    ×