search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் வலி ஏற்பட காரணங்கள்
    X

    உடல் வலி ஏற்பட காரணங்கள்

    வலி நோய், காயம் இவற்றினால் மட்டுமின்றி தசை நார் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, சுலுக்கு, சதை பிடிப்பு, மூட்டுகள் பாதிப்பு, வீங்கிய மூட்டுகள் இவற்றினாலும் ஏற்படலாம்.
    வலி என்றாலே சங்கடம் தான். நரம்பு மண்டல தூண்டுதலால் வலியினை நாம் உணர்கின்றோம். ஒருவருக்கு திடீரென வலி ஏற்படலாம். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக் கொண்டே செல்லலாம். மனநிலை சுற்றுப்புற சூழ்நிலை என வலி கூட பல காரணங்கள் உண்டு. அவரவராவே அவரவரது வலியின் கடுமையினை உணர்ந்து சொல்ல முடியும்.

    திடீர் வலி, நீண்ட கால வலி என வலியும் இரு பிரிவு படும். திடீர் வலி என்பது திடீரென ஏற்படும் உடல் பாதிப்பினால் ஏற்படுவது. பின்னர் தானாகவோ அல்லது மருந்தினாலோ தீர்வு பெறும். இது மிதமான வலியாகவும் இருக்கலாம். கடுமையான வலியாகவும் இருக்கலாம். முறையாக கவனிக்கப்படும் பொழுது அதிகமாக ஆறு மாதத்திற்குள் தீர்வு கிடைக்கும். இதற்கு முறையான சிகிச்சை இல்லையெனில் இது நிரந்தர வலியாக தொந்தரவு கொடுக்கின்றது.

    நீண்ட கால வலி என்பது இரண்டு வாரங்கள் முதல் சில வருடங்கள் வரை கூட இருக்கலாம். நோய் தீர்ந்த பிறகும், காயங்கள் ஆறிய பிறகும் கூட நீண்ட காலங்கள் இருக்கலாம். இந்த வலி அவருடைய செயல்பாட்டுத் திறனை குறைக்கும், தூக்கத்தினை கெடுக்கலாம்.

    திடீர் வலியோ, நீண்ட கால வலியோ மருத்துவரின் மூலம் தீர்வினைப் பெறுவதே சிறந்ததாகும். பொதுவில் தலைவலியும், முதுகு வலியும் உலகெங்கிலும் பொதுவாக மக்களால் கூறப்படும் வலி பிரச்சினையாகும். 50 வயதினை அடையும் மக்களில் 80 சதவீதத்துக்கும் மேல் ஒரு முறையேனும், சில முறையேனும் முதுகு வலியினைப் பற்றி அவதி என கூறாமல் இருப்பதில்லை.

    வலி நோய், காயம் இவற்றினால் மட்டுமின்றி தசை நார் பாதிப்பு, சதைகள் பாதிப்பு, சுலுக்கு, சதை பிடிப்பு, மூட்டுகள் பாதிப்பு, வீங்கிய மூட்டுகள் இவற்றினாலும் ஏற்படலாம். பொதுவில் முறையான உணவு, அளவான எடை, உடற்பயிற்சி இவை உடல் வலி, முதுகு வலியினை வெகுவாய் குறைக்கும்.

    * கோணலாக அமருவது.
    * உடல் ஆரோக்யமின்மை
    * உடல் தசைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது.
    * திடீரென கோணலாய் திரும்புவது.
    * அதிக எடையினை தூக்குவது.
    * மிக அதிகமான உடல் உழைப்பு

    இவை அனைத்தும் உடல் வலியினை உண்டாக்கும். நிற்பதும், நடப்பதும் முறையாய் இருக்க வேண்டும். ஒருபுறம் திரும்பி சற்று முட்டிகளை மடித்து தூங்குவது நன்மை பயக்கும்.

    வலி இருக்கும் பொழுது ஓய்வு அவசியம். ஆனால் அதிக ஓய்வு, முதுகு வலியினை கூட்டி விடும் என்பதனையும் கவனத்தில் கொள்க. பொதுவில் வலி இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தடம் 15-20 நிமிடம் வரை நாள் ஒன்றுக்கு சில முறை செய்து பின்பு வெதுவெதுப்பான சூடு ஒத்தடம் கொடுப்பது இறுகிய தசைகளை மென்மையாக்கும். வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.



    சதைகளில் வலி ஏன் ஏற்படுகின்றது?

    டென்ஷன், மனஉளைச்சல், அதிக உழைப்பு, காயங்கள், கிருமிகள் தாக்குதல் இவற்றினால் சதைகளில் வலி ஏற்படுகின்றது. உடல் முழுவதும் சதை வலி என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    கட்டிகள் எலும்பின் மீதோ, நரம்பின் மீதோ, உறுப்புகளின் மீதோ அழுத்தும் பொழுது வலி இருக்கக் கூடும். புற்று நோய் வலிகளை உடனடி, நீண்ட காலம் என இரு பிரிவு படுத்தலாம். குறுகிய கால உடனடி வலி அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் ஏற்படலாம். நீண்ட கால வலி நரம்பு பாதிப்பினால் ஏற்படலாம்.

    இவ்வலி எந்த இடம், எந்த வகை, என்பதனையெல்லாம் பொறுத்தே. வயது என்னவாக இருந்தாலும் விடாது தொடர்ந்து வலி என்பது தாங்க முடியாத மனவலியையும் சேர்த்துத் தரும். தலைவலி, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டு வலி, நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படும் வலி எனபதனை நாம் தொடர்ந்து ஒதுக்கி விட முடியாது அல்லவா? இவ்வலியோடு கீழ்கண்ட அறிகுறிகளும் இருக்கின்றனவா என்று பாருங்கள்.

    * ஜூரம்
    * மூட்டு வலியும் சேர்ந்து இருப்பது.
    * சதை வீக்கம்.
    * வலியினால் தூக்கமின்மை
    * தளர்ச்சி, சோர்வு, நோய் பாதிப்பு போன்ற உணர்வு. இவை இருந்தால் உடலில் என்ன பாதிப்பு என்பதனை கண்டறிய வேண்டும்.
    தசை நார்களில் வலி.
     
    இப்பிரிவு தசைகளிலும் மூட்டுகளிலும் அதிக வலியினைக் கொடுக்கும்.

    * மூட்டுகளில் வீக்கம்.
    * காலையில் கை, கால்கள் சற்று விறைத்து மடக்க, நீட்ட முடியாது. சிறிது நேரம் கை, கால், விரல்களை மடக்கி நீட்டிய பிறகே முன்னேற்றம் இருக்கும்.
    * மனச் சோர்வு
    * படபடப்பு
    * கவனிப்பதில் சிரமம்.
    * மைக்ரேன் தலைவலி
    * சாப்பிட்டாலும் வயிற்றுப் போக்கு.

    என இதில் பாதிப்புகள் அதிகம். மருத்துவர் உடற்பயிற்சி, சில குறிப்பிட்ட உடல் பயிற்சிகளை வலியுறுத்துவார். மருத்துவரும் தேவைப்படும். யோகா சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.தொடர்ந்து நீடிக்கும் சோர்வு இதன் அரிகுறிகள் தசை நார்களில் வலி போன்றே இருக்கும். ஆனால் தொடர்ந்து சோர்வு இருப்பது கூடுதல் பாதிப்பு ஆகும்.

    2-ம் நோய் இது ஒரு பூச்சி கடியினால் ஏற்படும் பரவும் கிருமி பாதிப்பு
    * சொல்லொண்ணா சோர்வு இருக்கும்.
    * பிளக்கும் தலைவலி
    * பரவிய உடல், எலும்பு வலி
    * மூட்டுகளில் வலி, பிடிப்பு
    * மறதி
    * தூக்கமின்மை



    ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து விட்டால் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தி விடலாம். இல்லை யெனில் நீடித்த மூட்டுவலி இருதய துடிப்பில் பிரச்சினை, மூளை, நரம்புகளில் பாதிப்பு என ஏற்படுத்தி விடும். மேலும் இத்துடன் சிவந்த பரந்த தோல் மாறுதலும் இருக்கலாம். மன அழுத்தம் தீராத மன ளைச்சல் மிகுந்த உடல் வலியினைத் தரும். இதில் மேற் கூறிய அறிகுறிகளுடன் நெஞ்சு வலி வயிற்று கோளாறு போன்றவையும் இருக்கும். வைட்டமின் டி சத்து குறைபாடு வைட்டமின் டி சத்து குறைபாடு இருந்தால் தொடர்ந்து உடல் வலி இருக்கும்.

    வைட்டமின் டி சத்து உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மிகுந்த உதவியாய் உள்ளது. கால்சியம் சத்து, மூலமே வலுவான எலும்புகள் பெற முடியும் டி சத்து குறைபாடு வலுவிழந்து, மென்மையான வலிக்கும் எலும்புகள் குறை பாட்டினை ஏற்படுத்தும் மருத்துவர் ரத்த பரிசோதனை மூலம் இதனை அறிந்து சிகிச்சை அளிப்பார். இதனை கவனிக்காமல் விட்டால் எலும்புகள் தேய்ந்து போகும்.

    ரத்தத்தில் இரும்பு சத்து குறைவு. இந்த குறைபாட்டில்

    * சதை வலி
    * வெளுத்த சருமம், நகம், மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு
    * எளிதில் உடையும் நகம், முடி மயக்கம்,
    * எரிச்சல் போன்ற அறிகுறிகள் எளிதாய் தெரியும்.
    கை கால்கள் மரத்தல், பார்வை மங்குதல், சிறுநீர் செல்லுவதில் பிரச்சினை சோர்வு போன்றவை நரம்பு மண்டல பரிசோதனை தேவைப்படுபவை.

    இது தவிர இன்னும் பல காரணங்களும் மருத்துவ பரிசோதனை மூலமே உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால் அதனை குறிப்பிடவில்லை. ஆனால் சாதாரண வலி என்பது வேறு, பாதிப்புள்ள வலி என்பது வேறு, அது பாதிக்கப்பட்டவராலேயே நன்கு உணர முடியும். எனவே அதனை அலட்சியம் செய்யாது உடனடி கவனிப்பதே சிறந்த முறையாக அமையும்.

    பொதுவாக வலி நிவாரணத்திற்கான சில குறிப்புகள்
    மூச்சு நன்கு நிதானமாய் இழுத்து விடுங்கள்
    மன அகுத்தம் உளைச்சல் தவிர்க்க தியானம் செய்யுங்கள்
    தகுந்த உடல் பயிற்யினை கற்றுக் கொள்ளுங்கள்.
    மது அதிக காபி, டீ தவிருங்கள்

    புகை வேண்டவே வேண்டாம்.
    மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
    அக்கு பங்சர் முறையினை வெளி நாட்டினர் மிகவும் சிபாரிசு செய்கின்றனர்.
    யோகா பழகுங்கள்

    ரிலாக்ஸ் செய்யுங்கள்
    குடும்பம் மற்றும் நண்பர்களோடு இருங்கள்.
    6-8 மணி நேர தூக்கம் அவசியம்.

    டாக்டர் கமலி ஸ்ரீபால்.
    Next Story
    ×