search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாப்பிடும்போது கடைப்பிடிக்கவேண்டிய நாகரிகம்
    X

    சாப்பிடும்போது கடைப்பிடிக்கவேண்டிய நாகரிகம்

    குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் சேர்ந்து சாப்பிடும்போது சில நாகரிக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அது என்னவென்று பார்க்கலாம்.
    குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் சேர்ந்து சாப்பிடும்போது சில நாகரிக முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘டேபிள் மேனர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். வெளிநாட்டு பாரம்பரியத்தில் மட்டுமின்றி இந்திய பாரம்பரியத்திலும் சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள், விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அவை குறித்து காண்போம்.

    சாப்பிடும் போது அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. மெதுவாக, நிதானமாக சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது வாயை மூடிக்கொண்டு சாப்பிட வேண்டும். வாயை திறந்து வைத்துக்கொண்டு உணவை மெல்லக்கூடாது.

    சாப்பிடும் போது உணவுப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டு சாப்பிட வேண்டும். உணவுகள் வாயில் சிந்தி சிதறும் வண்ணம் சாப்பிடக்கூடாது.

    ஓட்டல்களில் சாப்பிடும் போது உணவு பரிமாறுபவரை அழைக்கும் போது கையில் உணவு பொருட்களை வைத்துக்கொண்டு அழைக்கக் கூடாது. அதுபோல கையில் உணவுக்கரண்டி அல்லது நாப்கின் போன்றவற்றை வைத்துக்கொண்டு உணவு பரிமாறுபவரை அழைக்கக் கூடாது.

    மேஜையில் உள்ள கரண்டி போன்ற உணவு எடுத்துச்சாப்பிடும் உபகரணங்களை ஒரு முறை கையில் எடுத்து பயன்படுத்திவிட்டால் அதை மீண்டும் மேஜையில் வைக்கக் கூடாது. உணவு தட்டு அல்லது அருகில் உள்ள தட்டில் தான் வைக்க வேண்டும்.

    சாப்பிடும் மேஜையில் அமர்ந்திருக்கும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும். முதுகு, உடலை வளைத்துக்கொண்டு மேஜையில் அமரக்கூடாது.



    விருந்துக்கு சென்ற இடத்தில் உணவு வகைகள் உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் அதை வெளிக்காட்டக்கூடாது. உணவுகள் ருசியாக இல்லை என்று விருந்தளிப்பவர்களிடம் நேரடியாக கூறக்கூடாது. சாப்பிடும்போது குறைந்த அளவு உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது.

    சாப்பிடும்போது உங்களுக்கு தேவையான அளவு உணவுகளை மட்டுமே எடுத்து சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக உணவுகளை தட்டில் எடுத்துக்கொண்ட பின்னர் சாப்பிட முடியாமல் குப்பையில் கொட்டக்கூடாது.

    சாப்பிடும் போது உணவு இருக்கும் தட்டில் உள்ள உணவுகளை முறையாக எடுத்துச்சாப்பிடுங்கள். முறையற்ற வகையில் உங்கள் உணவுத்தட்டு இருப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிடும் போது வீணாகும் உணவுகளை அதற்கு என்று உள்ள தட்டில் வைக்க வேண்டும். உணவு சாப்பிடும் தட்டிலேயே அவற்றை வைக்க கூடாது.

    சாப்பிடும் போது ஏப்பம் அல்லது தும்மல் போன்றவை வந்தால் அதை நாசுக்காக கையாள வேண்டும். அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் நடந்து கொள்ளவேண்டும். மேலும் இந்த செயலுக்காக அருகில் இருப்பவர்களிடம் ‘மன்னிக்க வேண்டும்’ என்று சொல்வது நல்ல பழக்கமாகும்.

    சாப்பிடும் போது முள்கரண்டி, கத்தி, ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் உணவை சிறிய துண்டாக வெட்டிக்கொண்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும். பெரிய துண்டுகளாக உணவுகளை எடுத்து வாயில் திணிக்கக் கூடாது.

    சாப்பிடும் போது உங்கள் கைப்பை, பர்ஸ், மொபைல் போன் போன்றவற்றை மேஜையில் வைக்கக் கூடாது.

    ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப கரண்டி, முள் கரண்டி, கத்தி போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப அவற்றை பயன்படுத்த வேண்டும்.
    Next Story
    ×