search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி
    X

    வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி

    முள்ளங்கி சிறுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
    முள்ளங்கியை சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று இரு வகையாக பிரிக்கலாம்.

    சிவப்பு முள்ளங்கி

    சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப்படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும், ஜீரணத்தை எளிதாக்கும், மூலநோய், வெள்ளை நோய், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது. உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது. தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறுகுழந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.

    வெள்ளை முள்ளங்கி

    வெள்ளை முள்ளங்கி சிறுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும், சீதபேதியை கட்டுப்படுத்தும். எலும்புக்கு பலம் சேர்க்கும். மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம், மழைக்காலங்களில் வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கு ஆகாது. மாதவிடாய் காலங்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் இக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.
    Next Story
    ×