search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்
    X

    முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்

    ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.
    பலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டு வந்து கழிச்சலை உண்டாக்கும்.

    எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.

    காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.

    6 நூறு கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம் சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும்.

    அதற்கு நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில் ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை, எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய சூழலை நாம் அனுபவிக்கிறோம்.
    Next Story
    ×